சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட்., இந்தியாவில் பயிர்களைப் பாதுகாக்கும் கெமிக்கல்களைத் தயாரிக்கும் புகழ்பெற்ற ஒரு கம்பெனியாகும். இது தயாரிக்கும் புத்தாக்கமான புராடக்டுகள் மிகவும் பிரபலமானவை. இப்போது இந்த நிறுவனம் இந்திய விவசாயிகளுக்காக தனது பிரத்யேகமான காப்புரிமை பெற்ற 'ஆர்மி' என்னும் புதிய புராடக்டை வழங்குகிறது.
ஆர்மி என்றால் என்ன?
'ஆர்மி' என்பது நோய்களை மேம்பட்ட முறையில் கட்டுப்படுத்துவதற்காக ஒப்பற்ற முறையில் செயல்படும் இரண்டு பூஞ்சாளக் கொல்லி மருந்துகளின் புதுமையான சேர்க்கையாகும்.
1). ஆர்மி ஒரு ஆண்ட்டி-பயாட்டிக்காகச் செயல்படுகிறது. இது செடிகளுக்குத் தற்காப்பு முறையை உருவாக்கி, உள்ளுக்குள்ளேயே செடிகளை வலுமிக்கதாக ஆக்கி, அவற்றின் தற்காப்பு முறையை மேம்படுத்தி, நோய்களின் தாக்குதலை முறியடிக்கிறது. ஆர்மி தனது தொடுநஞ்சு செயல்பாட்டின் மூலம் ஒரு ஃபங்கல் ஹைப்பேயாகச் செயல்பட்டு, செடிகளின் சிஸ்டத்திற்குள் நோய்கள் நுழைவதையும், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகிறது.
2). ஆர்மி பூஞ்சைகளின் செல் சவ்வுகளில் உயிரி சேர்க்கையை மலடாக்குகிறது. இதன் மூலம் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
அம்சங்கள் | ஆதாயங்கள் | பயன்கள் |
---|---|---|
புதுமையான சேர்க்கை செயல்படும் முறை | பூஞ்சைகளின் பல இடங்களில் செயல்படுகிறது | செடிகளில் தற்காப்பு முறையை உருவாக்குகிறது |
நோய்க் கட்டுப்பாடு | தொடு நஞ்சாகவும், உள்பரவியும் இரட்டைச் செயல்பாடு | பாதுகாப்பு மற்றும் திறன்மிக்க நோய்க் கட்டுப்பாடு |
கொழகொழ திரவம் | மேம்பட்ட செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு மேலாண்மை | அபாரமான தாவர டானிக் பலன் |
அடர் திரவம் | நன்கு கரைகிறது | தாவரங்கள் மற்றும் சூழலுக்கு பாதுகாப்பானது |
'ஆர்மி' - யின் பயன்கள்
செடிகளின் தற்காப்பு முறையை உருவாக்குகிறது: செடிகளின் தற்காப்பு முறைக்கு ஆர்மி ஊக்கம் கொடுத்து, ஷீத் பிளைட் நோயை எதிர்த்து நெற்பயிர் போராடும் திறனை மேம்படுத்துகிறது.
பாதுகாப்பு மற்றும் திறன்மிக்க நோய்க் கட்டுப்பாடு: ஆர்மி நோய்த் தடுப்பாகவும், நோயின் ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்துவதாகவும் செயல்பட்டு, செடிகளுக்குப் |பாதுகாப்பைக் கொடுத்து, திறமைமிக்க முறையில் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அபாரமான தாவரடானிக் பலன்: ஆர்மி மருந்தைத் தெளிக்கும்போது அது செடியின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கச் செய்து, செடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் பலனாக செடிகள் பசுமையாகின்றன.
அளவு: 400 மிலி/ஏக்கர்
பயிர் | நோய் | அளவு/ஏக்கர் | தண்ணீர் அளவு /ஏக்கர் |
---|---|---|---|
நெல் | இலையுறை கருகல் (ரைஸோக்டானியா ஸொலானி) | 400 மிலி | 200 லிட் |
நெல்லில் ஷீத் பிளைட் நோய்க் குறியீடு மற்றும் தெளிப்பு மண்டலம் "ஆர்மி” 1 & 2-க்கு மட்டும்
ஆர்மி தெளிப்பதற்கு சரியான நிலை. நெற்பயிரில் ஒரே ஒரு தடவை மட்டும் ஆர்மி தெளிக்கவும்.
நிலை 1- தடுப்புக்காக அல்லது
நிலை 2- நோய் நிலையில் தோன்றிய ஆரம்ப
குறிப்பு: ஆர்மி மருந்தை நோய்த் தடுப்பாக அல்லது நோய் தோன்றியதும் ஆரம்ப நிலையில் மட்டும் தெளிக்க வேண்டும்.
நெற்பயிரின் நிலை மற்றும் “ஆர்மி” தெளிப்பதற்கான நேரம்
*DAT -நடவுக்குப் பிறகு நாட்கள்
குறிப்பு: குறுகிய காலப் பயிர்களில் நடவுக்குப் பின் 30-40 நாட்கள் கழித்து முதல் தெளிப்பு இருக்க வேண்டும்.
நீங்கள் ஆர்மி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: