போர்ஷன் என்றால் என்ன?
போர்ஷன் ஒரு புதுவிதமான அறிவியல் ஆராய்ச்சி செய்து சிலந்திப்பேன்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அவற்றின் ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. போர்ஷன் மருந்தின் இந்தத் தன்மையினால், ஏராளமான பயிர் இழப்பை ஏற்படுத்தும் முதிர்ந்த நிலையில் உள்ள சிலந்திப்பேன்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்திட இந்திய விவசாயிகளுக்கு உதவுகிறது. இவ்வாறாக, போர்ஷன் சிலந்திப்பேன்கள் நீண்ட காலத்திற்குக் கட்டுப்படுத்தி வைக்கிறது.
போர்ஷன் சிலந்திப்பேன் மீது எவ்வாறு செயல்படுகிறது?
போர்ஷன் ஐஜிஆர் (பூச்சி வளர்ச்சிக் கட்டுப்பாடு) மற்றும் காபா (காமா-அமினோபுட்டைரிக் ஆஸிட்) கலந்த பூச்சிக்கொல்லி மருந்து. இது செயலூக்கி முறையில் செயல்படுகிறது. எளிமையாகச் சொன்னால், ஐஜிஆர் என்ற முறையில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொறிக்கப்படுவதை போர்ஷன் தடுக்கிறது. மேலும், ஏராளமான பயிர் இழப்பை ஏற்படுத்தும் வகையில், இலைகள், குருத்துக்கள், மற்றும் பூக்களை உறிஞ்சித் தின்னும் குஞ்சுகளை அவற்றின் வாழ்க்கை சக்கரத்தில் அடுத்த நிலைக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது.
காபா (காமா-அமினோபுட்டைரிக் ஆஸிட்) ஸ்டிமுலேட்டர் என்ற முறையில், இது முதிர்ந்த சிலந்திப்பேன்களின் நரம்பு மண்டலத்தைச் சிதைக்கிறது. இதனால் சிலந்திப்பேன்களின் உணவு உண்பது தடுக்கப்பட்டு, அவை முடங்கிப் போகின்றன. இறுதியில் அவை இறக்கின்றன. எனவே, சிலந்திப்பேன்களின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள், குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த நிலையில் போர்ஷன் எதிர்த்து நின்று கட்டுப்படுத்துகிறது.
சிலந்திப்பேன்கள் பூச்சி வகையைச் சேராதவை. இந்த சிலந்திப்பேன்கள் இந்திய விவசாயிகளுக்கு மிகவும் தொல்லை தரக்கூடிய பெரிய பிரச்சினையாக உள்ளன. குஞ்சுகளாகவும், முதிர்ந்த நிலையிலும் உள்ள சிலந்திப்பேன்கள் இந்தியாவில் மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், பருத்தி, நெல், தேயிலை, சிட்ரஸ், ஆப்பிள், மலர்கள் ஆகிய பல வகையான பயிர்களை சேதப்படுத்துகின்றன.
சின்னஞ்சிறியதாக இருக்கும் சிலந்திப்பேன்கள் சத்தை உறிஞ்சக்கூடிய பூச்சிகளாக உள்ளன. இவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பயிர்களுக்கு பேராபத்தாக முடிந்து, கணிசமான சேதத்தை ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு பண இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த சிலந்திப்பேன்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பலவிதமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், இவை குறுகிய காலத்தில் மிக வேகமாகப் பல்கிப் பெருகுவதால், இவற்றைக் கட்டுப்படுத்துவது சவால்மிக்க வேலையாக உள்ளது.
முதிர்ந்த நிலையில் உள்ள சிலந்திப்பேன்களும், குஞ்சுகளும் செடிகளின் சத்தை உறிஞ்சி அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துவதால், சிலந்திப்பேன்கள் இரண்டு பருவங்களிலும் கட்டுப்படுத்த வேண்டிய அத்தியாவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே தடவையில் சிலந்திப்பேன்கள் அவற்றின் இரண்டு பருவங்களிலும் கட்டுப்படுத்தக்கூடிய போர்ஷன் பூச்சிக்கொல்லி மருந்தை சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிலந்திப்பேன்களின் எல்லா பருவங்களிலும் கட்டுப்படுத்துகிறது.
உடனடியாகக் கொல்கிறது.
நீண்ட காலத்திற்குக் கட்டுப்படுத்துகிறது.
தினசரி கட்டுப்பாட்டுச் செலவு குறைகிறது.
மற்ற ரசாயனப் பொருட்களுக்கு எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொண்ட சிலந்திப்பேன்களை ஒழிக்கிறது.
தினசரி அடிப்படையில் இதன் கட்டுப்படுத்தும் செலவு குறைவு.
மழையில் கரைவதில்லை.
போர்ஷன் - அனைத்து பருவங்களிலும் கட்டுப்பாடு
டோஸ்: 180 மிலி/ஏக்கர்
ஏக்கர் ஒன்றுக்கு தெளிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீர்: லிட்டர் ਲਿਟਰ
போர்ஷனைப் பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கைகள்:
போர்ஷனைத் தெளிக்கும்போது போதிய அளவுக்குத் தண்ணீர் பயன்படுத்துங்கள்.
பயிர்களின் மீது முழுவதும் படும்படியாகத் தெளிக்கவும்.
சிலந்திப்பேன்கள் தோன்றிய ஆரம்ப நிலையிலேயே (இலை ஒன்றில் 3-5 சிலந்திப்பேன்கள்) போர்ஷனைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் போர்ஷன் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: