A Grain Filling Technology

டாப் கிரெய்ன்® கிரெய்ன் ஃபில்லிங் டெக்னாலஜி

டாப் கிரெய்ன்® இந்தியாவில் முதன்முதலாக கதிர்களில் மணி பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கிரெய்ன் ஃபில்லிங் டெக்னாலஜியாகும். இது குறிப்பாக நெல் மற்றும் கோதுமைப் பயிர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கிறது
நெல்மணிகளின் எடை அதிகரிக்கிறது
அதிக விளைச்சல் திறன்
Golden filled grain TopGrain pack Better Grain Filling Uniform Development

மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கிறது

மேம்பட்ட தரத்துடன் அதிக அளவில் சீராக நிரம்பிய நெல்மணிகள்.

நெல்மணிகளின் எடை அதிகரிக்கிறது

அதிக எடையுள்ள நெல்மணிகளால் அதிக வருமானம்.

அதிக விளைச்சல் திறன்

விளைச்சலை அதிகரிப்பதால் லாபமும் அதிகரிக்கிறது.

TopGrain solution for paddy
Grain Filling Solution
தீர்வுகளும், செயல்படும் முறையும்

டாப் கிரெய்ன்® என்றால் என்ன?

டாப் கிரெய்ன்® இந்தியாவில் முதன்முதலாக கதிர்களில் மணி பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கிரெய்ன் ஃபில்லிங் டெக்னாலஜியாகும். இது குறிப்பாக நெல் மற்றும் கோதுமைப் பயிர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டாப் கிரெய்ன்® செடி நிலையில் செயல்பட்டு, பயிர்களின் இயற்கையான தானியங்களில் மணி பிடிக்கும் நடைமுறையை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் செடியின் முழுமையான வளர்ச்சித் திறன் நெல் மணி பிடிப்பதற்கு மாற்றப்படுகிறது. தானியத்தில் மணி பிடிக்கும்போது திறம்பட சர்க்கரைச் சத்து கொண்டு செல்லப்படுவதற்கும், ஸ்டார்ச் உருவெடுப்பதற்கும் இது உறுதுணையாக உள்ளது. பயிர்களின் வளர்ச்சியை விளைச்சலாக மாற்ற டாப் கிரெய்ன்® உதவுகிறது.

அறிவியல் செயல்முறை

டாப் கிரெய்ன்® எவ்வாறு செயல்படுகிறது

01

இடம் மாற்றுதல்:

இலைகளில் இருக்கும் சர்க்கரைச் சத்தை நெல் மணிகளுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.

02

திரட்டுதல்:

தண்டில் இருந்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள சக்தியை திரட்டுகிறது.

03

பயோஸிந்த்தெஸிஸ்:

நெல் மணிகளுக்குள் ஸ்டார்ச் உருவெடுக்க துணை புரிகிறது.

04

ஒரே சீரான தன்மை:

கதிரில் மிகவும் சமமாக ஒரே மாதிரியாக மணிபிடிப்பதை செய்கிறது.

விளைவு: நெல் மணிகள் முழுமையாக வளர்ந்து, கனமானதாக ஆகி, ஒரே சீராக ஆவதால் நெல் மணியின் விளைச்சலும், தரமும் மேம்படுகின்றன.

பிரச்சனை

நெற்கதிர்கள் நன்றாக தோற்றம் தந்தாலும், விளைச்சல் முழுமையாக இருப்பதில்லையே ஏன்?

இந்தியா முழுவதும் நெல் மற்றும் கோதுமைப் பயிர்கள் பூப்பூக்கும் வரை ஆரோக்கியமாக இருக்கின்றன. பயிர் நன்றாக வளர்ந்து, குருத்துகளும், கதிர்களும் சரியான முறையில் உருவாகின்றன. எல்லாமே நல்லபடியாக இருப்பது போல் தெரிகின்றன.

ஆனாலும், அறுவடையின்போது விவசாயிகளுக்கு அடிக்கடி கீழ்வரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன:

  • தானியங்களின் எடை குறைவாக இருக்கிறது
  • நெல் பதர் ஆகிறது அல்லது நெல் மணிகள் சீராக பால்பிடிப்பதில்லை
  • மகசூல் குறைகிறது
  • சந்தையில் வருமானம் குறைகிறது

தானியங்களின் எடை குறைவாக இருக்கிறது

நெல் பதர் ஆகிறது அல்லது நெல் மணிகள் சீராக பால்பிடிப்பதில்லை

மகசூல் குறைகிறது

சந்தையில் வருமானம் குறைகிறது

பயிர் விளைச்சலில் இழப்பு எங்கு ஏற்படுகிறது?

கதிர்கள் வெளிவந்த பின்பு, மணி பிடிக்கும் கடைசிக் கட்டத்திலும், மிக முக்கியமாக விளைச்சல் உருவாகும் நேரத்திலும் இழப்பு ஏற்படுகிறது. நல்ல ஹைபிரிட் ரக பயிர்களாக இருந்தாலும், முறையாக ஊட்டச்சத்து தந்தாலும், பயிர்களை நன்கு பாதுகாத்த போதிலும், பெரும்பாலும் கதிர்களில் போதிய அளவுக்கு மணி பிடிப்பதில்லை.

கதிர்களில் ஏன் மணி பிடிக்காமல் போகிறது

  • கார்போஹைடிரேட்ஸ், புரோட்டின், லிபிட்ஸ் ஆகிய சத்துக்கள் இலைகள் மற்றும் தண்டுகளில் இருந்து நெல் மணிகளுக்குச் செல்வது தடைபடுகிறகு.
  • வெப்ப நிலை, ஈரப்பதம், அல்லது சமமற்ற ஊட்டச்சத்துக்களின் காரணமாக பயிர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.
  • கதிர்களின் முனையில் உள்ள நெல்மணிகள் சரிவர வளர்ச்சி அடைவதில்லை.

விளைவு: பயிர்களின் முழு சக்தியும் அறுவடைக்கு ஏற்ற விளைச்சலாக மாறாமல் போகிறது.

தொழில்நுட்ப பின்னணி

நெல் மணி பிடிக்கும் தருணம்: விளைச்சல் இறுதியாகத் தீர்மானிக்கப்படும் தருணம்

இலைகளில் நிகழும் ஒளிச்சேர்க்கையினால் உற்பத்தியாகும் உணவும், தண்டில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சக்தியும், வளர்ச்சியடைந்து வரும் நெல் மணிகளுக்குள் நுழைந்து, நெல் மணிகள் முதிர்ச்சி அடையும் வரை படிப்படியாக நெல் மணிகளை நிரப்புவதுதான் நெல் மணிப்பிடிக்கும் பருவம் எனப்படுகிறது.

இந்தப் பருவத்தில் தீர்மானிக்கப்படும் முக்கிய அம்சங்கள்:

நெல் மணிகளின் எடை
நெல் மணிகளின் உறுதி
நெல் மணிகளின் ஒரே சீரான தன்மை
இறுதியாக விற்பனைக்கு ஏற்ற விளச்சல்
Grain filling close-up

வயலில் இந்தப் பருவத்தில் என்ன தவறு நிகழ்கிறது

இந்தியாவில் பயிர் வளரும் நிலைமைகளில் வெப்பம், சமமற்ற ஈரப்பதம், ஊட்டச்சத்து குறைபாடுகள், சமமற்ற அளவில் ஹார்மோன் சுரப்பது போன்ற அழுத்தங்களினால் சர்க்கரைச் சத்து நகர்வது அடிக்கடி தடைப்படுகிறது.

இதன் விளைவாக, வெளியில் இருந்து பார்க்கும்போது பயிர்கள் ஆரோக்கியமாகக் காட்சி அளித்தாலும், நெல் மணிகளில் போதுமான அளவுக்கு சக்தி கிடைக்காமல் போகிறது, நெல் மணிகள் முழுமையாக நிரம்புவதில்லை. எனவேதான், நெல் மற்றும் கோதுமைப் பயிர்களில் தானியமணி பிடிப்பது மிகவும் முக்கியமான பருவமாகிறது.

பயன்கள்

டாப் கிரெய்ன்® மருந்து மூலம் விவசாயிகளுக்கு என்ன கிடைக்கிறது?

டாப் கிரெய்ன்® தரும் பயன்கள் அறுவடையில் வெளிப்படையாகத் தெரிகின்றன. நெற்பயிரில் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கிறது.

01

நெற்பயிரில் மணி பிடிப்பது அதிகரிக்கிறது:

  • பதர் ஆவதும், அரைகுறையாக மணி பிடிப்பதும் குறைகிறது
  • நெல்மணியின் எடையும், உறுதியும் அதிகரிக்கிறது
  • முதிர்ச்சி அடையாத தானியங்கள் குறைகின்றன
02

ஒரே சீராகவும், சரியான அளவிலும் நெல்மணியின் வளர்ச்சி:

  • கதிரில் நெல்மணி பிடிப்பது ஒரே சீராக நிகழ உதவுகிறது
  • அரவையின்போது நெல் மணிகள் உடைவது மிக குறைகிறது, ஒரே சீராக தானியத்தின் சைஸ் இருப்பதாலும் சந்தை மதிப்பு கூடுகிறது
03

நெல்மணியின் தரம் மேம்படுகிறது:

  • கனமான, கெட்டியான மற்றும் நன்றாக நிரம்பிய நெல் மணிகள் உற்பத்தி செய்கிறது
  • டெஸ்ட் எடை போன்ற முக்கியமான தர அளவீடுகளை மேம்படுத்துகிறது
04

முதலீட்டிற்கு அதிக வருமானம்

  • நெல்மணிகள் தரம் அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
  • பயிரின் சத்துத் திறனை விளைச்சலாக மாற்றுவதன் மூலம் விவசாயிக்கு லாபம் அதிகரிக்கிறது

டாப் கிரெய்ன்® - பயிர் வளர்ச்சியை அறுவடை விளைச்சலாக மாற்றுகிறது.

தெளிப்பது

சரியான நிலை, சரியான அளவு, சிறந்த விளைவு

லேபிள் வழிமுறைகளும் உள்ளூர் வேளாண் நிபுணரின் ஆலோசனையும் பின்பற்றி பயன்படுத்தவும்

டாப் கிரெய்ன்® அளவு ஏக்கர் ஒன்றுக்கு 25 கிராம் நெல் மற்றும் கோதுமை பயிர்களில்
Paddy application stage
தெளிக்கும் நேரம்

50% கதிர் வெளிவரும் பருவம்

ஹெடிங் பருவம்: என்பது முளையில் இருந்து 50% முதல்நிலை கதிர் வெளிப்படுதல்

Wheat application stage
தெளிக்கும் நேரம்

கோதுமை மணி பிடிக்கும் ஆரம்ப நிலை

கோதுமை மணி பிடிக்கும்: ஆரம்ப நிலையில் தெளிப்பது என்பது மணிகள் நீர்ச்சத்துடன் முதிர்தல் அல்லது ஆரம்ப நிலை பால்பிடிக்கும் பருவம்; அந்த்தெஸிஸ் நிகழ்ந்த பிறகு சுமார் 7-10 நாட்கள்

கலப்பதற்கும் தெளிப்பதற்கும் ஆலோசனை

பயன்படுத்த ஆலோசனை: தெளிப்பதற்கான கலவையை தயாரிப்பதற்கு, தேவையான அளவு டாப் கிரெய்ன்® மருந்தை பாதியளவு நீர் நிரம்பிய ஸ்பிரே டேங்க்கிற்குள் சேர்க்க வேண்டும் தேவையான அளவுக்கு முழு தண்ணீரையும் ஊற்றி கலக்க வேண்டும்.

நன்றக கலக்கி டாப் கிரெய்ன்® மருந்து முழுமையாகக் கரையவிட வேண்டும். பிறகு நான் -அயானிக் சர்ஃபெக்டண்ட் @0.5 மிலி/லிட்டர் நீர் என்ற அளவில் சேர்க்க வேண்டும்.

விவசாயிகளின் அனுபவங்கள்

டாப் கிரெய்ன்® குறித்து விவசாயிகளின் கருத்துகள்

விவசாயிகளின் அனுபவங்களை அறிந்து, டாப் கிரெய்ன்® அவர்கள் பயிர்களில் கதிர் நிரப்புதல், தரம் மற்றும் விளைச்சல் திறனை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை பாருங்கள்.

விவசாயிகளின் அனுபவங்கள்

टॉपग्रेन® - फसल कटाई का जश्न - धमतरी, छत्तीसगढ़

Watch on YouTube
விவசாயிகளின் அனுபவங்கள்

धान में बेहतर पैदावार व गुणवत्ता के लिए किसान की सलाह

Watch on YouTube
சிறந்த நிரப்பு • சிறந்த எடை • சிறந்த திறன்

ஒவ்வொரு கதிரிலும் உங்கள் பயிரின் முழு திறனை வெளிப்படுத்துங்கள்

ஒரு நிபுணருடன் பேசுங்கள்
எங்களை தொடர்பு கொள்ளவும்

டாப் கிரெய்ன்® பற்றிய மேலும் தகவல் வேண்டுமா?

உங்கள் பெயர், கைபேசி எண் மற்றும் மாவட்டத்தை பகிரவும். எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும்.

உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும்.
உள்ளூர் தயாரிப்பு ஆதரவு.
மாவட்ட வாரியாக தொடர்பு கொள்ளவும்.
தயவுசெய்து உங்கள் பெயரை உள்ளிடவும்.
சரியான 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிடவும்.
தயவுசெய்து உங்கள் மாவட்டத்தை உள்ளிடவும்.
தொடர்பு கொள்ள ஒப்புதலை வழங்கவும்.
Contact